84. பாத3: to பாரத:

1661. பாத3: = பாதம், கால், ஒளிக் கிரணம், வேர், மலை அடிவாரம், கால் பங்கு, செய்யுளின் ஒரு அடி, பாகம், பகுதி.

1662. பாத3கமலம் = பாத3பத்3மம் = பாத3பங்கஜம் = பாதா3ரவிந்த3ம் = தாமரைப்பூ போன்ற கால்கள்.

1663. பாத3க்3ரஹனம் = பாதங்களைப் பற்றுதல்.

1664. பாத3சாரின் = காலாட்படை வீரன், கால்நடையாகச் செல்பவன்.

1665. பாத3ப: = மரம்.

1666. பாத3மூலம் = குதிகால், மலை அடிவாரம், தாழ்ந்த நிலம்.

1667. பாத3ரக்ஷா = பாத3ரக்ஷ: = செருப்பு.

1668. பாத3ஸேவனம் = பணிவிடை செய்தல், வணங்குதல்.

1669. பாது3கா = பாதக்குறடு.

1670. பாத்3யம் = காலைக் கழுவும் நீர்.

1671. பானம் = பானகம் = பானீயம் = பானம், குடிநீர், குடித்தல்.

1672. பாந்த2: = வழிப்போக்கன், யாத்ரிகன்.

1673. பாபிஷ்ட = பாபீய = பாவமுள்ள, மிகக்கெட்ட.

1674. பாமர: = மட்டமான, மூடன்,

1675. பாயஸ: = பாயஸம் = பாயசம்.

1676. பாயு: = மலத்வாரம்.

1677. பார: = பாரம் = எதிர்க்கரை, எதிர்ப்பக்கம்.

1678. பாரமித = தேர்ச்சி பெற்ற, கரை ஏறிய, நன்கு அறிந்த.

1679. பரணம் = பாரணா = விரதம் முடிந்த பின் உண்ணுதல்.

1680. பாரத: = பாரத3: = பாதரசம்.

Leave a comment